blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, May 10, 2014

யாழ். ஊடகவியலாளர்கள் மீது அச்சுருத்தல்; விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட அச்சுருத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும், இந்திய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று  நேற்று இடம்பெற்றது.
நிகழ்வினை அறிக்கையிட சென்ற யாழ். ஊடகவியலாளர்களுக்கு இதன்போது தடங்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்  யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►