
அண்மையில் வெளிநாட்டில் இருந்து வந்த தனவந்தர் ஒருவர் முதலீட்டை செய்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர சபையில் கட்டடிட விண்ணப்பத்தை ஒப்படைத்து ஏழு மாதங்களாகின்ற போதிலும் இதுவரைக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன்.
வட மாகாண சபையின் ஒன்பதாவது கூட்டத் தொடர் நேற்று பகல் 9.45 மணியளவில் சபையின் முதல்வர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. பிற்பகல் அமர்வில் கவனயீர்ப்பு பிரேரனை ஒன்றைச் சபையில் கொண்டு வந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ""வெளிநாட்டில் வாழும் எமது உறவுகள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதில் பல்வேறு தடைகளைச் சந்திக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. வெளிநாட்டில் இருந்து வந்த முதலீட்டாளர் ஒருவரை சந்தித்தேன். அவர் குறிப்பிட்டார் "யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்வதற்காக கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு கட்டிட வரைபடத்தை யாழ்ப்பாணம் மாநகர சபையில் சமாப்பித்தேன்.
ஏழு மாதங்கள் கடந்து விட்டன. அந்த வரைபடத்தை அங்கீகரிப்பதற்க்கு யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், செயலாளராக இருக்கும் அவருடைய கணவரும் கையூட்டுக் கேட்கின்றார்கள்' என்று இந்த சபையில் இது பற்றி பல தடவைகள் முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் மற்றும் பரஞ்சோதி ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். சபையின் தலைவரும் கூட கதைத்துள்ளார். இந்த வகையில் இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் இத்தகைய சம்பவங்கள் பற்றிய விசாரணைகளையும் மேற் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply