
தாய்லாந்து அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு ஆர்ப்பாட்டங்களை அடுத்து நேற்று முதல் அங்கு இராணுவ ஆட்சி உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தப்பட்டது.
இதனிடையே அந்நாட்டு நேரத்தின் படி நேற்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை நாடளாவியரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு அமைதிப் படைகளின் அறிவிப்புகளும் தேசப்பற்று பாடல்களும் சுதேசிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் மாத்திரமே ஒலி ஒளிபரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றுகூடல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சிறைத்தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
எனினும் வன்முறைகள் இடம்பெறாத வண்ணம் அவர்கள் திருப்பியனுப்பட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டக்கார்களுக்கான விசேட போக்குவரத்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1932 ஆம் ஆண்டு தாய்லாந்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது முதல் அந்நாட்டு இராணுவம் இதுவரை 18 முறை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதுடன் அதில் 11 தடவைகள் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் தாய்லாந்து இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply