கிளிநொச்சி
மாவட்டத்தில் தாவரவியல் பூங்காவொன்றை அமைப்பதற்கு தாவரவியல் பூங்கா
மற்றும் பொது பொழுதுபோக்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.வடமாகாணத்திற்கே உரித்தான உயர் பல்வகைமை மற்றும் அருகிவரும் தாவரங்கள் மற்றும் பூக்களை பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தாவரவியல் பூங்காவை அண்மித்த பகுதிகளில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் எனவும் தாவரவியல் பூங்கா மற்றும் பொது பொழுதுபோக்கு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
உத்தேச பூங்கா அமைக்கப்படவுள்ள பகுதியை கண்காணிப்பதற்காக அமைச்சர் ஜயரத்ன ஹேரத் விரைவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
Leave A Reply