blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, May 17, 2014

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நரேந்திர மோடிக்கு அழைப்பு

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நரேந்திர மோடிக்கு அழைப்புஇந்திய மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியீட்டிய   பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர்  வேட்பாளர் நரேந்திர மோடியை தமது நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.

 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தொலைபேசி மூலம் நரேந்திர மோடியை தொடர்புகொண்ட அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்புடுத்திக் கொள்ளும் நடவடிக்கைகள் புதிய பிரதமரினூடாக முன்னெடுக்கபடும் எனவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு முதல் நரேந்திர மோடிக்கான அமெரிக்க விஸா தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய மக்களவைத் தேர்தலில் இறுதி முடிவுகள் இதுவரையிலும் அறிவிக்கப்படாத நிலையில்  இதுவரை வெளிவந்த முடிவுகளின் பிரகாரம் பாரதிய ஜனதா கட்சி தனித்து 282 தொகுதிகளை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது.

இதன்மூலம் பாரதிய ஜனதா கட்சி தனித்து ஆட்சியமைக்கும்  பலத்தை பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் நரேந்திர மோடி அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கோரியுள்ளார்.

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதபாகவும்  தமக்கு எவரும்  எதிரிகள் இல்லை எனவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தமிழகத்தின்  39 தொகுதிகளில் 37 தொகுதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி தன்வசமாக்கிக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►