blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, May 26, 2014

பாரதத்தின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவிப் பிரமாணம்

பாரதத்தின் 15ஆவது பிரதமராக பாரதீய ஜனதாக் கட்சியின் நரேந்திர மோடி  பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.


இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்ட்ரபதி பவனில் இந்த பதவிப் பிரணமான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இந்த வைபவத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாய், மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமின், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பூட்டான் பிரதமர் ஷெரிங்க் டொப்கே மற்றும் நேபாள பிரதமர் சுஷில் கொய்ரால ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதால் அவர் சார்பில் பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ச்சௌத்திரி இந்தியப் பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி  இந்தியப் பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவிலுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு இந்த வைபவத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும், தமிழக முதல்வர் ஜெயலிலிதா ஜெயராம் இந்தியப் பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்வதை நிராகரித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் ஒருவரின் பதவிப் பிரமாண வைபவத்தில் அதிகளவிலான அரச தலைவர்கள் கலந்துகொண்ட முதலாவது சந்தர்ப்பமாகவும் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண வைபவம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►