
சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்-கெய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடனை பிடிக்க அவரது மருத்துவர் ஷகீல் அஃப்ரிடி என்பவர் அமெரிக்காவின் உளவுத்துறை சி.ஐ.ஏ-வுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
இதனால் அவருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டதையடுத்து, அவர் மீதுள்ள வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெறுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை நியாயமற்றதாக உள்ளது என அமெரிக்க கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறியதாவது, மருத்துவர் ஷகீல் அஃப்ரிடியின் விவகாரத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கை தேவையற்றது என்று நம்புகிறோம்.
அவர் மீதான குற்றச்சாட்டும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையும் கவலையளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுடனான எங்களின் நிலைப்பாட்டை பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இவ்விடயம் தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் நடத்தபடும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் விவாதிக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply