எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, May 22, 2014
வடமாகாண ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வாதப் பிரதிவாதம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிறேமதாஸ எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிப்பதற்காக ஐந்து தடவைகள் கால அவகாசம் கோரப்பட்டதால் பாராளுமன்றத்தில் இன்று வாதப் பிரதிவாதம் ஏற்பட்டுள்ளது.
தாம் 2012 ஆம் ஆண்டு எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இதுவரை பதில் வழங்காமல் ஆளும் கட்சியினர் கால அவசாகம் பெற்றுவந்துள்ளதாக சஜித் பிரேமதாஸ இதன்போது சபையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி பாராளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கான பதிலை மேலும் தாமதப்படுத்தாமல் வழங்குமாறு ஆளும் தரப்பினருக்கு அறிவித்தார்.
ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஸ் குணவர்தன இதன்போது கருத்து வெளியிடுகையில், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவின் கேள்விக்கு பதிலளிப்பதற்கு கால அவகாசம் கோரப்பட்டதை ஒப்புக்கொள்வதாக கூறினார்.
வெளிநாடுகளில் தொழில் புரிவோருக்கான வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தொடர்பிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சர் சுகயீனம் காரணமாக பாராளுமன்றத்தில் பிரசன்னமாகவில்லை என தெரிவித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அதற்கான பதிலை வழங்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சரை நாளை பாராளுமன்றத்திற்கு அழைத்து பதில் வழங்குமாறு உத்தரவிடுமாறு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசங்க இதன்போது அக்ராசனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஆராயுமாறு பாராளுமன்ற செயறலாளருக்கு ஆலோசனை வழங்குவதாக இதன்போது பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, வடமாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யபப்படாமை தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த விடயத்தில் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமன்றி மாகாண சபைக்கும் பொறுப்பு உள்ளதாக தெரிவித்தார்.
ஒரே தடவையில் அற்புதம் நிகழ்த்துவதைப் போன்று ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யமுடியாது எனவும் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்தவர். இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்.
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
ஜனாதிபதி மாளிகையிலிருந்த மெக்கோ கிளிகளை காணவில்லை கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த மெக்கோ ரக க...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply