
இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என இலங்கை மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்தார்.
இதன் பிரகாரம் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.
இதேவேளை, தமிழகத்தின் கன்னியாகுமரி கடற் பரப்பில் நேற்று முன்தினம் 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த மீனவர்கள் இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த மீனவர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நேற்று மேற்கொண்டதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply