எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, May 22, 2014
இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து போட்டிகளும் சவாலாக அமையும் -மெத்யூஸ்
இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து போட்டிகளும் சவாலாக அமையும் என எண்ணுவதாக இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெத்யூஸ் தெரிவிக்கின்றார்.
அத்துடன், இன்றைய போட்டியை எதிர்கொள்வதற்கு தமது அணி தயாராகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ
மெத்யூஸ் தெரிவித்த கருத்து:-
இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து போட்டிகளும் சவாலாக அமையும் என எண்ணுவதாக இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெத்யூஸ் தெரிவிக்கின்றார்.
அத்துடன், இன்றைய போட்டியை எதிர்கொள்வதற்கு தமது அணி தயாராகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்த கருத்து:-
“சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து எப்போது சவால் மிக்க அணியாகும். கடந்த இருபதுக்கு இருபது போட்டியில் இங்கிலாந்து அணி சவாலாக விளையாடியது. அலஸ்டெயார் குக்கும், ஜேம்ஸ் அன்டர்சனும் இங்கிலாந்து அணியில் இணைகின்றனர்.
இந்த இரண்டு வீரர்களும் மிகவும் அனுபவமிக்கவர்கள். அவர்கள் இங்கிலாந்து அணிக்கு பாரிய பங்களிப்பு வழங்குவார்கள்.
இந்த போட்டி சவாலாக அமையும். அதற்கான தயார் நிலையில் நாம் உள்ளோம். அனைத்து கிரிக்கெட் தொடர்களும் எமக்கு முக்கியமானவை. உலகக் கிண்ண போட்டிகள் குறித்து தற்போது அதிக கவனம் செலுத்தவில்லை.
எனினும் பங்குபற்றும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெறுவதற்கு முயற்சிக்கின்றோம். அடுத்த வருடம் மற்றுமொரு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. அது எமக்கு மிகுந்த சவாலானவொன்றாகும்.
எனினும் விளையாடும் அனைத்து போட்டிகளையும் முக்கியமானதாகவே கருதுகின்றோம். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.”
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி மாலை 5.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் இலங்கை அணி இன்றைய போட்டியை எதிர்கொள்ளும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்தவர். இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்.
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் வைத்தியர்களின் கவனக்குறைவால் அறுவை சிகிச்சையின் போது குடல் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துள...
No comments:
Post a Comment
Leave A Reply