
சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் கைது செய்யப்பட்டு அவர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
வட கரோலினாவைச் சேர்ந்த வாலிபர் ஜார்ட் ஒர்க்மேன் (வயது 27) இவருக்கும் 14 வயதே ஆன ஒரு சிறுமிக்கும் சமூக இணையத்தளம் மூலம் பழக்கமானது. சில நாட்களுக்கு முன் சிறுமி அந்த வாலிபரைச் சந்தித்துள்ளார்.
அப்போது, இர்டெல் கவுண்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அழைப்பை ஏற்றுகொண்ட ஒர்க்மேன் அமெரிக்காவின் இர்டெல் கவுண்டிப் பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது மாணவியின் பெற்றோர் இல்லை. இதனால் சிறுமியின் அறைக்குள் சென்று விட்டார்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிறுமியின் அறையை அவரது தாயார் சுத்தபடுத்தினார் அப்போது மாணவியின் அலுமாரியில் சில துணைமணிகளை வைக்கச் சென்றபோது அலுமாரியில் இருந்து வாலிபர் ஒருவர் வெளிப்பட்டு மின்னல் வேகத்தில் ஓடியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் வாலிபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து விசாரணை அதிகாரிகள் கூறியதாவது:-
“வாலிபர் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 2 ஆம் திகதி வரை 5 நாட்கள் சிறுமியின் அறையில் தங்கி உள்ளார். தேவைப்படும் நேரத்தில் அலுமாரியில் பதுங்கியுள்ளார். இது பெற்றோருக்குத் தெரியவில்லை.
சிறுமி கூறும் போது வாலிபர் ஒன்லைன் மூலம் பழக்கமானதாகக் கூறினார்.
மேலும், அவர் வீட்டிற்கு வந்த பிறகு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறியுள்ளார். சிறுமியும் வாலிபரும் ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு 3 வாரங்களுக்கு முன்தான் பரிச்சயம் ஆகி உள்ளனர். 11 முறை பாலியல் பலாத்காரம் மற்றும் 5 முறை பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு உள்ளதாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply