blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, May 3, 2014

வெளிநாட்டவர்களை இணையத்தில் பாலியல் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் குழு கைது

newsஇணையத்தளங்கள் ஊடாக வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களை குறிவைத்து பாலியல் ரீதியான கருத்தாடல்களை மேற்கொண்டு தமது மாயவலையில் விழவைத்து அதன் மூலம் பல கோடிகளை சுருட்டி வந்த கும்பல் ஒன்றை பிலிப்பைன்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கும்பலில் உள்ளவர்கள் ஆரம்பத்தில் இளம்பெண்களைப் போல தமது குரலை மாற்றி தொடர்புகொள்வர். பின்னர் அவர்களை வெப்கம் மூலம் தொடர்புகொண்டு அவர்களுக்கு கவர்ச்சியான அரைகுறை ஆடையில் இருக்கும் பெண்களின் படங்களைக் காட்டுவர்.

இந்த நிலையில் எதிரில் உள்ள நபர் அந்தரங்க செயற்பாட்டில் ஈடுபடும் போது அவர்களுக்கு தெரியாமலே அவர்களது புகைப்படஙகளை எடுப்பர். பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து குறித்த நபர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்கள் என பிலிப்பைன்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கும்பலின் மாய வார்த்தைக்கு மயங்கிய 17 வயதுடைய கொட்லாந்தைச் சேர்ந்த டானியல் பெர்ரி என்னும் சிறுவன் பின்னர் பணம் செலுத்த முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையிலேயே இந்த குழவின் செயற்பாடு வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►