
இதன்காரணமாக குறித்த தாதி மாணவர்கள் பாரிய அசௌரியங்களை எதிர்நோக்கி வருவதாக சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் வைத்திய சேவைக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுனில் டி அல்விஸ்சிடம் நியூஸ் பெஸ்ட் வினவியது.
தாதி மாணவர்களின் இந்த பிரச்சினை குறித்து இதுவரை எவ்விதமான முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
விசேடமாக குறித்த தாதி மாணவர்கள் தொடர்பில் அவர்கள் பயிற்சி பெறும் தாதிக் கல்லூரிகள் சிரேஷ்ட அதிகாரிகள் ஊடாக உரிய தகவல்கள் சுகாதார அமைச்சிற்கு அனுப்பட்ட பின்னர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக அவர் கூறியுள்ளார்.
கொடுப்பனவு கிடைக்காத தாதி மாணவர்களின் விபரங்களும் சுகாதார அமைச்சிற்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் வைத்திய சேவைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுனில் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.
தாதி மாணவர்களுக்கு இவ்வாறான பிரச்சினை நிலவும் பட்சத்தில் அது தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply