blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, May 5, 2014

ஃபேஸ் புக்கை ஃபேஸ் பண்ணுவது எப்படி?

ஆண்கள் டாஸ்மாக்கில், பெண்கள் சீரியலில், இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் ஃபேஸ்புக்கில்.. பேனா நட்பு என்று ஒரு காலத்தில் தொடங்கிய நட்பு இன்று ஃபேஸ்புக் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. எவ்வளவு லைக்ஸ்? இது தான் இப்ப டாக் ஆஃப் தி டவுன். தூங்கி எழுந்திருச்சா பல் துலக்குறங்களோ இல்லையோ ஸ்டேடஸ் போட்டே ஆகணும் இல்லைன்னா மண்டை வெடிச்சுடும் என்ற நிலையில் தான் இருக்காங்க இன்றைக்கு பல இளைஞர்கள்.
ஈஸியா ஃப்ரெண்ட்ஸ் சேர்க்கிறது, சாட்டிங், கலந்துரையாடல், அரசியல் விமர்சனங்கள், கல்யாணம், காதுக்குத்து, புத்தக வெளியீடு, ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்காதது ஏன்?

இப்ப மன் மோகன் சிங் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது வரை புகுந்து விளையாடுகிறார்கள் முகப்புத்தகம் அல்லது வதனபுத்தகம் என்று தமிழார்வலர்களால் அழைக்கப்பெறும் ஃபேஸ்புக்கில்.

ரஜினிகாந்த் ஃபேஸ் புக்கில் இருந்தால் தான் அவரது படம் போனியாகும். அந்த அளவு இருக்கிறது பேஸ்புக் மோகம். அறிமுகம் இல்லாதவர்களிடமும் நட்பு கிடைக்கும். பால்ய சிநேகிதர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.

காதலி கிடைப்பார்கள். இதெல்லாம் இருக்கும் அதே நேரத்தில் ஃபேஸ்புக்குக்கு மறுபக்கமும் உண்டு. உதாரணமாக, சாட்டிங் மூலம் பெண்களை ஏமாற்றுவது, பிரபலம் போல் தங்களைக் காட்டிக் கொள்வது, பண மோசடி செய்வது இப்படி சில. இது தவிர பிரபலங்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்தி ஸ்டேடஸ், கமெண்ட்ஸ் போடுவது போன்ற மறைமுகமான பனிப்போர் பலரை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.  ஃபேஸ்புக் மாயையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் அளவிற்கு நிர்பந்தம் ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஆனாலும் இணையதள சூப்பர் ஸ்டாராக இன்றும் வலம் வருவது ஃபேஸ்புக் தான்.

பல மாயங்கள் செய்யும் மேஜிக் ஃபேஸ்புக்கில் இருக்கு. ரசிப்பதோடு நிறுத்திங்க. அதன் மாயையில் மூழ்கிடாதீங்க. அளவுக்கு மிஞ்சினால்...

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►