துருக்கியின் மேற்குப் பிராந்தியத்திலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிச்சம்பவத்தில் 201 பேர் உயிரிழந்துள்ளனர்.787 பேர் வரையில் அச்சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்ததாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மனிசா பிராந்தியத்தின் சோமா பகுதியில் உள்ள குறித்த நிலக்கரி சுரங்கத்தினுள் அகப்பட்டுள்ள ஏனைய பணியாளர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
76 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப் பணியாளர்களின் உறவினர்கள் குறித்த சுரங்கத்திற்கு அருகில் கூடியிருப்பதாகவும் சுரங்கத்தினுள் ஒக்சிஜன் வாயுவை உட்செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply