முல்லைத்தீவு
– பனிக்கங்குளம் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்படவில்லை எனத்
தெரிவித்து, அந்த பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வவுனியா மாவட்டத்திலுள்ள மின்சார சபையின் வடக்கின் வசந்தம் அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் மீள்குடியேற்றப்பட்ட பனிக்கங்குளம் கிராமத்திற்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தபோதிலும், நீண்ட நாட்களாக மின்சாரம் வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முல்லைத்தீவிலிருந்து வருகைதந்த இந்தக் குழுவினர் வவுனியா – வைரவபுளியங்குளத்திலுள்ள சிறுவர் பூங்காவில் ஒன்று திரண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அங்கிருந்து மின்சார சபையின் வடக்கின் வசந்தம் அலுவலகம் வரை பேரணியாக ஆர்ப்பாட்டக்காரர்கள், தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன்போது அங்கு வருகைதந்த மின்சார சபையின் அதிகாரிகள், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டக்காரர்களினால் மின்சார சபையின் அதிகாரிகளிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மின்சார சபையின் வடக்கின் வசந்தம் திட்டத்தின் திட்ட முகாமையாளர் த.குணசீலனிடம் வினவியபோது, இரண்டு மாதங்களில் மின் இணைப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply