இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. பஸ்சில் ஒசூர் மத்திகிரியை சேர்ந்த பிச்சமணி என்பவரது மகள் தரணி (வயது 18) என்பவர் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது தாய் சுமதி உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தால் பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பலியான இளம்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment
Leave A Reply