
சீனாவின் தொல்பொருள்துறை பேராசியர் ஒருவரும் கலாநிதி ஒருவரும் இந்த குழுவில் அடங்குவதாக தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வு பிரிவிற்கான பணிப்பாளர் நாமல் கொடித்துவக்கு தெரிவித்தார்.
இந்த குழுவினர் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து, மன்னார் பழைய துறைமுகத்தில் பண்டைய காலத்தில் கப்பல் போக்குவரத்து எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என ஆய்வு செய்யவுள்ளனர்.
நாட்டின் பண்டைய துறைமுகங்களில் மன்னார் துறைமுகமும் ஒன்றாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 2600 வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியில் இந்த துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டுள்ளமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்பொருள் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply