
அண்மைக்காலமாக ரயில் சாரதிகள் தாக்கப்பட்ட சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் நோக்கிலே இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலின் ஊடாக பிரச்சினைக்கான உரிய தீர்வை பெற்றுக் கொள்ளவுள்ள எதிர்பார்த்துள்ளதாக லொக்கோமோடிவ் ஒபரேடிங் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் டீ.ஜீ விஜேரத்ன கூறினார்.
பொத்துஹர மற்றும் அளவ்வ உள்ளிட்ட பகுதிகளில் சாரதிகள் மீது இடம்பெற்ற தாக்குல் சம்பவங்களினால், தமது ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மின்சார ரயிலில் சேவையில் ஈடுபடும் சாரதிகள் நேற்று சுகயீன விடுமுறையில் தமது கடமைகளுக்கு சமூகமளிக்கவில்லை என சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, சில ரயில் சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காததன் காரணமாக, நேற்று மாலை 14 ரயில் சேவைகளை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக ரயல்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply