வெசாக்
காலப்பகுதியில் நாடு முழுவதும் அமைக்கப்படவுள்ள அன்னதான நிகழ்வுகளுக்கு
இலவசமாக குடிநீரை விநியோகிக்குமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு
அமைச்சு அறிவித்துள்ளது.நாட்டிலுள்ள அனைத்து விகாரைகளுக்கும் குறைந்த செலவில் குடிநீர் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.
அன்னதான நிகழ்வுகளுக்கு வெசாக் வாரத்தில் மாத்திரம் இலவசமாக குடிநீர் வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.
இதற்கமைய, அன்னதான நிகழ்வுகளுக்கு குடிநீர் தேவைப்படின், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு அறிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்தக் காலப்பகுதியில் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படாதெனவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment
Leave A Reply