நாட்டில்
சுமார் 4,000 கிராம உத்தியோகத்தர்களை விரைவில் புதிதாக
இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக
உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.நாடெங்கிலும் 4,400 கிராம உத்தியோகத்தர்களுக்கு பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக அமைச்சர் டபிள்யூ ஜே செனவிரத்ன குறிப்பிட்டார்.
சுமார் 500 உத்தியோகத்தர்கள் இதுவரையில் தமது நியமனங்களை பொறுப்பேற்கவில்லை என அமைச்சர் கூறினார்.
இதற்கமைய, பரீட்சையின் புள்ளிகளுக்கு அமைய, ஏனையவர்களை பதவிக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் டபிள்யூ ஜே செனவிரத்ன மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment
Leave A Reply