blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, May 2, 2014

கிளிநொச்சியில் 5646 விதவைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் கணவன் இழந்து விதவைகளாக 5646 பெண்கள் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் வெள்ளிக்கிழமை (02) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அத்துடன், 1888 பெண்கள் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்.

இவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களிலும், ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்களிலும், தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் வேலைக்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், தன்னார்வு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட சுயதொழில் உதவிகள் கடன்கள் மூலம் சுயதொழில்களையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 1 இலட்சத்து 32 ஆயிரத்து 513 பேரில் 12 ஆயிரத்து 756 பேர் முதியவர்களாகக் காணப்படுகின்றனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►