வவுனியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 27 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியா கலாபாகஸ்வெவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற அரசியல் கூட்டம் ஒன்றுக்கு வருகை தந்தவர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுளள்ளனர்.
குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலையில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
குறித்த அரசியல் கூட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந் 8 பொலிஸாரும், 04 இராணுவ வீரர்களும் 15 பொதுமக்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply