இத்தாலி
நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு ஒன்று
கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் பலியானதாகவும், 200க்கும் மேற்பட்டோரைக்
காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற இந்தப் படகு லெம்படுசா தீவிலிருந்து 185 கி.மீ தெற்கே கடலில் மூழ்கியுள்ளது.
இதிலிருந்து சுமார் 215 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
படகில் பயணித்தவர்களின் எண்ணிக்கை தங்களுக்குத் தெரியவில்லை என்று லெம்படுசா துறைமுகத்தின் கெப்டன் கியுசெப் கன்னரிலே கூறியுள்ளார்.
இன்னமும் தாங்கள் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தப்பிப் பிழைத்தவர்கள் இன்னும் நூற்றுக்கணக்கானோர் குறித்த படகில் பயணித்ததாகக் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 8,00,000 ஆப்பிரிக்க மக்கள் ஐரோப்பா நோக்கி புலம்பெயர்ந்துள்ளதாக இத்தாலியின் உள்துறை அமைச்சகம் இந்த மாத ஆரம்பத்தில் ஒரு மதிப்பீட்டைத் தெரிவித்திருந்தது.
No comments:
Post a Comment
Leave A Reply