காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையில் சட்டவிரோதமாக இரும்புகள் ஏற்றிய 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலை துப்பரவுப்பனிக்ககாக நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருந்த காலவதியான அனுமதிபத்திரத்தை வைத்து இரும்புகளை வெட்டியதற்காக இவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளோம்.
இவர்களில் 14 சந்தேகநபர்களை 4 மாதம் 29 திகதி கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் இதேவேளை மல்பானை பகுதியை சேர்ந்த பிரதான சந்தேக நபரை 4 மாதம் 30 திகதி கைதுசெய்து நீதிமன்றில் முபடுத்தி இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் பயன்படுத்திய வாகனமும், இரும்புவெட்டும் இயந்திரமும், காஸ் சிலிண்டரும் கைப்பற்றி நீதிமன்றில் ஒப்படைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
Leave A Reply