மதக் குழுக்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் தொடர்பிலான
முறைப்பாடுகளை கையாள்வதற்கான விசேட பொலிஸ் பிரிவு இன்று முதல்
ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
கொழும்பு
07, அநகாரிக தர்மபால மாவத்தையிலுள்ள புத்தசாசன மற்றும் சமய விவகார
அமைச்சில் இந்த பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் இந்த விசேட பொலிஸ் பிரிவு செயற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நாட்டின்
எந்தவொரு பாகத்திலும் இடம்பெறுகின்ற மத விவகாரங்கள் தொடர்பான
முறைப்பாடுகளை இந்த பிரிவிற்கு அறிவித்து, தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்
எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார்.
இந்த பொலிஸ் பிரிவிலுள்ள அதிகாரிகளுக்கு அனைத்து வித பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும்
காலத்தில் எழுத்துமூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்,மின்னஞ்சல் மூலமாகவும்
முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி
கொடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில்
இடம்பெறுகின்ற சமய ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்
கொடுக்கும் நிறுவனமாக புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சு
விளங்குவதாகவும், தாம் அந்த நிறுவனத்துடன் இணைந்து சிறந்த சேவையொன்றை வழங்க
முடியும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மதக்
குழுக்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளை இல்லாதொழிப்பதற்கான
நடவடிக்கைகள் இந்த பிரிவின் ஊடாக முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

No comments:
Post a Comment
Leave A Reply