blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, April 28, 2014

ரூ.2 ஆயிரம் எடுத்தவருக்கு போனசாக ரூ.700 தந்தது ஏடிஎம்

நாகர்கோவிலில் உள்ள ஏடிஎம்மில் ரூ.2 ஆயிரம் பணம்  எடுத்தவருக்கு கூடுதலாக ரூ.700 கிடைத்தது. நாகர்கோவில் பெண்கள்  கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி  ஏடிஎம்-ல் நேற்று முன்தினம் மாலையில் பணம் எடுக்க  சென்றவர்களுக்கு அதிர்ச்சியும், ஆனந்தமும் காத்திருந்தது. ஒருவர்  ரூ.4 ஆயிரம் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டை நுழைத்தார்.
  அவருக்கு வங்கி செயல்பாடுகள் முடிந்த பின்னர் பணம் வரவில்லை.  ஆனால், ரூ.4 ஆயிரம் எடுத்துவிட்டதாக சிலிப் வந்தது.  அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் என்ன செய்வது என்று  தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தார்.

இதுதொடர்பாக வங்கி மேலாளருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.  சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளர் ஏடிஎம் முன்பு வந்தார்.

அப்போது  இன்னொருவர் வந்து ரூ.2 ஆயிரம் பணம் எடுக்க ரூ.700 அதிகமாக  வந்தது. இதனை கண்ட வங்கி மேலாளர் அதிகமாக வந்த ரூ.700ஐ  அந்த நபரிடம் இருந்து திரும்ப பெற்றுக்கொண்டார். உடனே  அங்கிருந்தவர்கள், ‘பணம் எடுப்பவர்களுக்கு கூடுதல் பணம் வருவதும்,  சிலருக்கு பணம் வராமலேயே பணம் வந்ததாக சிலிப் வருவதுமாக  உள்ளது‘ என்று மேலாளரிடம் புகார் தெரிவித்தனர்.இதனால் அந்த  பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் அந்த ஏடிஎம்  செயல்பாடுகளை கண்காணித்த வங்கி மேலாளர் பின்னர் ஏடிஎம்  அறையின் ஷட்டரை மூடிவிட்டு சென்று விட்டார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►