இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் 107 நாடுகளை சேர்ந்த
பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரம்
மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த மாநாட்டில் சர்வதேச கண்காணிப்பு குழுக்கள் சிலவும் பங்கேற்கவுள்ளதாக அமைச்சு கூறுகின்றது.
சர்வதேச
இளைஞர் மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காக, உள்நாட்டு மற்றும்
வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 250ற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் தமது
வருகையை உறுதி செய்துள்ளதாக இளைஞர் மாநாட்டிற்கான செயலகத்தை
மேற்கோள்காட்டி, இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு
குறிப்பிடுகின்றது.
ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச தரத்திலான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது
சர்வதேச இளைஞர்கள் மாநாடு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
Leave A Reply