வில்பத்து தேசிய சரணாலயத்தின் வடப் பகுதியில் சட்டவிரோதமாக
தங்கியுள்ளவர்களுக்கு மன்னார் மறிச்சுக்கட்டி பகுதியில் மாற்றுக்
காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய
மறிச்சுகட்டி பகுதியிலுள்ள 40 ஏக்கர் நிலப்பரப்பு தெரிவு
செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.தேசபிரிய
தெரிவிக்கின்றார்.
வில்பத்து சரணாலயத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள
73 குடும்பங்கள் குறித்த காணியில் மீள் குடியேற்றுவதற்காக, தெரிவு
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வில்பத்து தேசிய
சரணாலயத்தை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ஏனைய
குடும்பங்களுக்கும் மாற்றுக் காணிகளை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பதிவுகளும் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
வில்பத்து
தேசிய சரணாலயத்தின் வட பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான சட்ட விரோத
குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சூழலியலாளர் ரவீந்திர காரியவசம்
தெரிவித்துள்ளார்.
இதனால் சரணாலயத்தின் உயிர் பல்வகைமைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை,
வில்பத்து தேசிய சரணாலயத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு எதிராக
சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர்
விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply