blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 12, 2014

ஹட்டன் மாணிக்க பிள்ளையார் ஆலய பஞ்சரதபவனி


இலங்கையின் மத்திய மலைநாட்டில் எழில் கொஞ்சும் ஹட்டன் நகரில் கோயில் கொண்டெழுந்தருளி அனைவருக்கும் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இன்று (12.04.2014) பஞ்சரதபவனி இடம்பெற்றது. இது தேவஸ்தானத்திலிருந்து நேராக மல்லியப்புக்கடைவீதி ஊடாக பஸ் நிலையம் வரை சென்று திரும்பி டன்பார் வீதி வழியாக ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் வீதி ஊடாக தேவஸ்தானத்தை வந்தடைந்தது.

இதன்போது அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

மேலும், எதிர்வரும் 14ம் திகதி பால்குடபவனி காலை 9 மணிக்கு வில்ப்ரட் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து மணிக்கூடு கோபுரத்தில் திரும்பி ஆலயத்தை வந்தடையும், 15ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும், 16ம் திகதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்ரீ வைரவர் பொங்கலும் விசேட பூஜையும் இடம்பெற்று விழா நிறைவு பெறும்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►