blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, April 10, 2014

கொழும்பில் உலக சமாதான அமைப்பின் சர்வதேச மாநாடு; ஜெமீலுக்கு தூதுவர் நியமனம்; பஷில், ஹக்கீமுக்கு நெல்சன் மண்டேலா விருது!

Jameel-6-150x150

உலக சமாதான அமைப்பின் (OWP) சர்வதேச மாநாடும் சமாதானத் தூதுவர்கள் நியமனமும் சமாதான விருது வழங்கும் வைபவமும் நாளை வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

உலக சமாதான அமைப்பின் தலைவர் ஆபித் அலி ஆபித் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு பிரதான சிறப்புரையை நிகழ்த்தவுள்ளார்.

இதன்போது உலக சமாதான அமைப்பின் இலங்கைக்கான சமாதானத் தூதுவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படவுள்ளார்.

அதேவேளை உலக சமாதான அமைப்பின் மாலைதீவுக்கான சமாதான தூதுவராக அந்நாட்டின் பிரதி சபாநாயகர் அஹமட் நஸீம் இதன்போது நியமனம் செய்யப்படவுள்ளார்.

அத்துடன் அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு “நெல்சன் மண்டேலா சமாதான் விருது” வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் இன ஐக்கியத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் அரும்பணியாற்றி வருகின்ற மூவின சமூகத்தையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் என சர்வதேச புகழ்பெற்ற ஐந்து அதிமுக்கிய பிரமுகர்கள் இதன்போது விசேட சமாதான விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

அமைச்சர் ராஜித சேனாரட்ன, இலங்கை சமாதானப் பேரவையின் பணிப்பாளர் ஜொஹான் பெரேரா, தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் ஜெஸீமா இஸ்மாயில், கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன், ஜனநாயக பேரவையின் பணிப்பாளர் புஞ்சிஹேவா ஆகியோரே இந்நிகழ்வில் சமாதான விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

டென்மார்க் நாட்டை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலக சமாதான அமைப்பின் ஊடாக இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் அரசியல் ரீதியான சமாதான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதன் ஓர் அங்கமாகவே நாடுகள் தோறும் சமாதானத் தூதுவர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►