எடை
குறைந்த பாண்களை தயாரிக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கான அபராத கட்டணத்தை
அதிகரிப்பது தொடர்பில் அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள்
திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.தற்போது அறவிடப்படும் அபராதத் தொகை போதுமானதாக இல்லை என திணைக்களத்தின் பணிப்பாளர் கே. பிரேமசிறி குறிப்பிட்டார்.
பெரும்பாலான பேக்கரி உரிமையாளர்கள் உரிய எடைக்கு பாணை தயாரிப்பதில்லை என்பது அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவ்வாறான பேக்கரி உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதிலும், அபராதத் தொகையை செலுத்திய பின்னர் அவர்கள் மீண்டும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கே பிரேமசிறி குறிப்பிட்டார்.
இந்த நிலைமையினை கருத்திற்கொண்டு, தற்போது அறவிடப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கான சில யோசனைகள், அமைச்சிடம் அனுமதி பெற்றுக்கொள்வதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்தது.
No comments:
Post a Comment
Leave A Reply