கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்த 300க்கும்
மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிக்கின்றது.
அந்த வர்த்தகர்களுக்கு
எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அதிகார சபையின் பிரதேச
விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் அசேல பண்டார கூறுகின்றார்.
பண்டிகைக்
காலத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் சுற்றிவளைப்புக்களை
மேற்கொண்டதாக
நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியது.
கடந்த
வாரம் முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் சில்லறை
விலை 77 ரூபாவாகவும், வெள்ளை நாட்டரிசியின் விலை 68 ரூபாவாகவும், ஒரு
கிலோகிராம் சிவப்பு நாட்டரிசியின் விலை 66 ரூபாவாகவும், சிவப்பு
பச்சையரிசியின் விலை 60 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment
Leave A Reply