தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பிரிவின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான கபிலன் அல்லது நந்தகோபன் கடந்த மாதம் 6 திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் பயங்கரவாத தடுப்புபிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித்ரோஹண மெட்ரோநியூஸூக்கு தெரிவித்தார்.
"கபிலன் புலிகள் அமைப்பின் நெடியவன் பிரிவின் தலைவராக செயற்பட்டுள்ளார். பேரின்பநாயகம் சிவபாலனின் அல்லது நெடியவனின் குழுக்களில் ஒன்றே புலிகள் அமைப்பின்
சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் செயற்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது.
நெடியவன் அமைப்பின் ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பாக கைது செய்யப்பட்டுள்ள கபிலன் என்பவரே செயற்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
புலிகள் அமைப்பின் பிரதான அங்கத்தவர்களில் ஒருவரான கபிலன் வெளிநாட்டில் புலிகள் அமைப்பு தொடர்பில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவர் மலேஷியாவில் இருந்து போலி கடவுச்சீட்டின் மூலம் பிரித்தானிய வுக்கு செல்ல முயற்சித்தபோதே கோலாலம்பூரில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் அவரை கைது செய்தனர். இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க கபிலன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டர்.
கடந்த மாதம் 6 திகதி இலங்கைக்கு கபிலன் அனுப்பட்ட போது கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்' என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply