பறந்து பழகும் பட்டாம்பூச்சி போல
என் காதல்....
மெல்ல மெல்ல சிறகு விரிக்கும் போது
உயிர் குடிக்க வருகிறது
தூரத்தில் ஒரு
பார்வைப் புயல்.....
கண்ணுக்கு தெரியாத
அன்பினால் தானே
இன்று உலகமே கைதியாகி கிடக்கிறது...
உன்னை பார்த்துவிட்டு
சிறை இருப்பதில்
துன்பம் ஏது எனக்கு......
உன்னை நினைத்துக் கொண்டு
வாழ்ந்திருப்பேன்
தடை சொல்ல யார் வருவார்????
No comments:
Post a Comment
Leave A Reply