blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, April 11, 2014

கலிபோர்னியா ஷாப்பிங் மாலில் புகுந்த முதலை: வாடிக்கையாளர்கள் ஓட்டம்


கலிபோர்னியா ஷாப்பிங் மாலில் புகுந்த முதலை: வாடிக்கையாளர்கள் ஓட்டம்

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஷாப்பிங் மாலில் பிராணிகள் கடை ஒன்று உள்ளது. அக்கடைக்கு வெளியே திடீரென முதலை புகுந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.

வீட்டில் இந்த முதலையை வளர்த்து வந்த யாரோ ஒருவர் அதை வேண்டாமென்று அங்கு விட்டு சென்றிருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. இது பற்றி தகவல் கிடைத்தவுடன் கலிபோர்னிய மீன் மற்றும் விலங்கின அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து அந்த முதலையை பிடித்து பாதுகாத்து வருகின்றனர். அதை வனவிலங்கு காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

சுமார் 4 அடி நீளமுள்ள அந்த முதலையின் தாடை கடினமான டேப் பயன்படுத்தி கட்டப்பட்டிருந்தது. நாய் பிடிக்கும் கருவி கொண்டு பிடிக்கப்பட்ட இந்த முதலையால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►