இரத்த சிவப்பு நிற சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பு வட மற்றும் தென்
அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஹவாய் தீவுகளில் உள்ள மக்களுக்குக்
கிட்டியுள்ளது.
இன்று இரவு 1.58 மணிக்கு நிலாவின் நிறம் மாறத்
துவங்கும். நிறம் மெல்ல மெல்ல மாறி 3.07 மணிக்கு நிலா சிவப்பு நிலாவாகக்
காட்சியளிக்கும்.
இந்த காட்சி அதிகாலை 4.24 மணி வரை நீடிக்கும்.
இந்த
சந்திர கிரகணம் வட மற்றும் தென் அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஹவாய்
தீவுகளில் காட்சியளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் மேகமூட்டம் சிவப்பு நிலாவை
மறைக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் டாலாஸ், டென்வர் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகர்களில் சிவப்பு நிலா கண்ணுக்குப் புலனாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15, ஒக்டோபர் 8 மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 4 மற்றும் செப்டம்பர் 28 ஆகிய திகதிகளில் நிலா சிவப்பு நிறமாக மாறும்.
No comments:
Post a Comment
Leave A Reply