நோட்டன், ஒஸ்போன் பகுதியில் ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தியதாகக் கூறப்படும் இளைஞன் மருத்துவ சோதனைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக
கூறப்படும் சிறுமியும் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ
சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அயலவரான குறித்த இளைஞனால் சிறுமி நேற்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமக்கு
கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையை
உறுதிசெய்யும் நோக்கில் சட்ட மருத்துவ அதிகாரியின் உதவியை நாடியுள்ளதாக
பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறுமி துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தப்பட்டமை உறுதிசெய்யப்படும் பட்சத்தில், இளைஞன் மீது சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் நோட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply