blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 22, 2014

மஹேல, சங்கா இருவருக்கும் சிக்கல்!

மஹேல, சங்கா இருவருக்கும் சிக்கல்!



இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக் கிரிக்கெட் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றியீட்டி நாடு திரும்பியதன் பின்னர், மஹேலவும் சங்காவும் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கருத்துக்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதா​க தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இக்கருத்துக்கள் குறித்து இருவரிடமும் ஒழுக்காற்று விசாரணை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தயாராகி வருகிறது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►