மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான
பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ந்தேதி அதிகாலை
நடுவானில் மாயமானது. மாயமாகி 5 வாரங்கள் ஆகியும் இதுவரை உறுதிபடுத்தும்
படியான எந்த தகவலும் பெறப்படவில்லை.
இந்த நிலையில், விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக
கருவியானது பிஙகர் லொக்கேட்டர் அமெரிக்காவில்
இருந்து ஆஸ்திரேலியா கொண்டு
வரப்பட்டு தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
விமானத்தின் கருப்பு
பெட்டி தேடுதலில் இரண்டு கப்பல்கள் 240 கிலோமீட்டர் பரப்பளவில்
ஈடுபடுகின்றன.
இந்த நிலையில்,கடந்த சனிக்கிழமை இந்திய பெருங்கடலின் தென்பகுதியில்
சீனாவின் ஹைசூன் 01 கப்பல் காணாமல் போன மலேசிய விமானத்தின் கறுப்பு
பெட்டியின் சிக்னலை கண்டறிந்து உள்ளது.வினாடிக்கு 37.5 கிலோகெட்ஸ்
அதிர்வெண் கருப்பு பெட்டியில் இருந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த்
சிக்னல் கடலின் 19 ஆயிரம் அடியில் இருந்து வருவதாக கணக்கிட்டு
இருந்தது.இதுபோல் நேற்று சீன கப்பல் கண்டறிந்த சிக்னலில் இருந்து 330
கிலோமீட்டர் தூரத்தில் ஆஸ்திரேலிய கப்பலான ஓஷன் ஷீல்டுக்கு சிக்னல் ஒன்று
கிடைத்தது என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், விமானத்தின் கறுப்பு பெட்டியின் சிக்ன்ல்கள் என்று
நம்பப்படும் சமிக்ஞைகள் மங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. கறுப்பு
பெட்டியின் பேட்டரிகள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தேடும் பணி
துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் ஆப்கானுக்கு
கடத்தப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளதாகவும் ரஷிய தகவல்
வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, April 12, 2014
சமிக்ஞைகள் மங்குவதால் மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
சர்வதேச குற்றம் என்பதால் மலேசிய விமானம் விழுந்து நொறுங்கி கிடக்கும் இடத்தில் உள்ள தடயங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அழித்து வருகின்றனர...
-
கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் இன்று அதிகாலை 3.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply