யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரிக்குப் பின்னாலுள்ள கிணற்றில் இருந்து 14 ஆம்
திகதி திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின்
மரணத்திற்கு காரணம் என பெற்றோர்களினால் கூறப்படும் இரு பாதிரியார்களையும்
யாழ்.நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ்
அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார்.
யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கென்சலிற்றாவின் மரணத்தில் தொடர்புபட்டதாகக் கூறப்படும், இரு பாதிரியார்களையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கு ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? என ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
கொன்சலிற்றாவின் தொலைபேசிக்கு இரு பாதிரியார்களின் கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து ஏற்படுத்திய அழைப்புக்களின் விபரங்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவின் பேரில் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
அந்த அழைப்புக்களின் விபரங்களுடனும், சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனையின் பிரகாரமும், மே மாதம் 12 ஆம் திகதி இரு பாதிரியார்களையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும், நீதிமன்றின் உத்தரவில் நீதிவான் விசாரணையும் இடம்பெற்று வருகின்றதாகவும் யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply