blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 22, 2014

சபை அமர்வை அம்பாந்தோட்டையில் நடத்த உத்தேசம்?

நாடாளுமன்ற அமர்வொன்றை அம்பாந்தோட்டையில் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் தனது அவதானத்தை செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதற்காக அம்பாந்தோட்டை மாகம் றுஹுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தைப் பயன்படுத்தவும் அரசாங்க தரப்பு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள நாடாளுமன்றத்துக்கு முன்னால் புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நாடாளுமன்ற அமர்வுகளை வேறொரு இடத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, 'நாடாளுமன்றமானது கட்டம் கட்டமான புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றது.

சபை வளாகம் புனர்நிர்மாணத்துக்கு உட்படும் காலப்பகுதியில் மாத்திரம் வேறு ஓரிடத்தில் சபை அமர்வுகள் நடத்தப்படலாம். இருப்பினும் இது தொடர்பில் உறுதியானதொரு தீர்மானம் எட்டப்படவில்லை' என அவர்

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►