'சரியான நேரத்தில் ஓய்வு பெறும் கிரிக்கெட் வீரர்கள் ஏனையோரை விட சிறப்பானவர்கள். இருபது20 இளம் வீரர்களின் போட்டி. அவர்கள் சரியான முடிவு எடுத்துள்ளார்கள் என நான் நினைக்கிறேன்
' என அவர் கூறினார்.
இதேவேளை தங்களது ஓய்வு குறித்த கருத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் தவறாகவும் பொறுப்பற்ற வித்திலும் வெளியிட்டதாக மஹேலவும் சங்கக்காரவும் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுப்பு வெளியிட்டது.
இந்நிலையில் நேற்றுக் காலை தனது ஓய்வினை எழுத்து மூலம் மஹேல ஜயவர்த்தன முறையாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் வெற்றி குறித்து 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு முதன் முறையாக உலகக் கிண்ணத்தை பெற்றுக்கொடுத்து முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கூறுகையில், 'விசேட அணியான முயற்சியே இலங்கை அணி உலக இருபது20 கிண்ணத்தை வெற்றிபெறக் காரணமானது' என்றார்.
உலக இருபது20 தொடரில் இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான மஹேல ஜயவர்த்தன தொடரின் முதல் 10 துடுப்பாட்ட வீரர்களில் இடம்பெறவில்லை.
அதேபோல இலங்கை அணியின் தொடரின் சிறந்த பந்துவீச்சாளரான நுவன் குலசேகர அதிக விக்கெட்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் 9ஆவது இடத்தினையே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரணதுங்க கூறுகையில், ஆசியக் கிண்ணத்தினூடா தனிநபர் திறமை மற்றும் பங்களாதேஷில் இலங்கையின் அனுபவம் சிறப்பாக இருந்தது.
நீங்கள் தொடரினை பார்த்தால் இளம் மற்றும் புதிய வீரர்களிடமிருந்து எராளமான பங்களிப்பு கிடைத்துள்ளது. மஹேல, சங்கக்கார பற்றியும் நாம் பேச வேண்டும் அதேபோல சிறப்பா பந்துவீசிய மாலிங்கவும். ஆனால் ஒவ்வொரு வீரரும் சிறந்த பங்களிப்பை மேற்கொண்டிருந்தாக நான் உணர்கிறேன்.
சாதாரணமாக தொடரில் பல நாயகர்கள் உள்ளனர். ஆனால் நான் பார்த்தது இளம் மற்றும் மூத்த வீரர்கள் இணைந்த பங்களிப்புச் செய்தனர். இது எதிர்கால இலங்கை கிரிக்கெட்டின் சிறந்த அறிகுறியாகும்.
அணியில் வெளியில் தெரியாத சிறந்த வீரர்களாக குலசேகர, சச்சித்ர சேனநாயக்க, குஷல் பெரேரா மற்றும் ரங்கண ஹேரத் ஆகிய நால்வர் உள்ளனர். தொடர் மழுவதும் சேனநாயக்கவும் குலசேகரவும் சிறப்பாக பந்துவீசினர்.
'சங்கக்கார, டில்ஷான் மற்றும் மஹேல ஆகியோரின் சுமை குஷால் பேரேரா சுமந்தார். அது சனத் ஜயசூர்யின் பாத்திரத்தை போன்று இருந்தது. சில நேரங்களில் தவறான ஷொட்களும் விளையாடினார். ஆனால் அது அவரது பாணி.
அணியின் வெற்றியில் நலன் கருதி தினேஷ் சந்திமாலின் விட்டுக்கொடுப்பானது அணித்தலைவராக யாராலும் செய்ய முடியாது. இந்த வெற்றிக் அவர் உரித்துடையவர் என நான் நினைக்கிறேன். இது ஏனைய வீரர்களுக்கான சிறந்த முன்மாதிரி' எனவும் பாராட்டினார்.
No comments:
Post a Comment
Leave A Reply