முன்னாள் சோவியத் ஒன்றிய
நாடுகளில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் ரஷ்யக் குடியுரிமை வாங்குவதை
எளிதாக்கும் விதமான புதிய சட்டத்துக்கு ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின்
ஒப்புதல் அளித்துள்ளார்.
யுக்ரெய்னுடன் சென்ற மாதம் இணைந்துள்ள யுக்ரெய்னின் க்ரைமீயா பகுதியில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு ரஷ்யக் குடியுரிமை வழங்குவதாக வந்த சட்டத்தின் நீட்சியாக இந்த அறிவிப்பு வருகிறது.
யுக்ரெய்னின் கிழக்குப் பகுதியும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசம்தான்.
அங்கு வாழும் மக்கள் பலர், யுக்ரெய்னில் கடந்த பிப்ரவரி மாதம் ஐரோப்பிய ஆதரவு அரசாங்கம் ஒன்று பொறுப்பேற்றிருப்பது தொடர்பில் ஆழமான ஐயப்பாடுகளைக் கொண்டுள்ளனர்.
புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள துரித வழிமுறை மூலமாக மூன்று மாத காலத்தில் ஒருவர் ரஷ்ய குடியுரிமை பெற முடியும்.
ரஷ்ய கடவுச் சீட்டுகளை பெறக்கூடியவர்கள், தங்களுடைய மற்ற நாட்டு பிரஜாவுரிமையைத் துறக்க வேண்டும் என்ற நிபந்தனை புதிய சட்டத்தின் கீழ் இருக்கிறது.
No comments:
Post a Comment
Leave A Reply