இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் இங்கிருந்து ஏராளமான கலைப்பொருட்களை எடுத்துச்சென்றது அனைவருக்கும் தெரிந்தது. அந்தவகையில் 17–ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டங்களில் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்களின் நீதிமன்றங்களில் வைக்கப்பட்டிருக்கும் குத்துவாள் ஒன்று லண்டனின் ‘கிறிஸ்டி’ அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த வாளின் கைப்பிடியில், வைரம், மரகதம், மாணிக்கம், நீலமணிக்கல் மற்றும் பல்வண்ண ரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகம் அடுத்த வாரம் ‘இஸ்லாமிய கலைப்பொருட்கள் விற்பனை வாரத்தை’ கொண்டாடுகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த குத்துவாளும் ஏலம் விடப்படும் என தெரிகிறது. இந்த வாள் ரூ.1½ கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply