இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ஏறக்குறைய 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி கடந்த மாதம் ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில்,போர் குற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க இலங்கை மறுத்துள்ளது.இது தொடர்பாக கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பெரிஸ், ஐநாவின் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போர் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை முன்கூட்டியே முடிவு எடுத்திருப்பதால், அவர் தலைமையிலான விசாரணை நேர்மையாக நடைபெறாது என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply