மீனவர்களுக்கு தேவையான மண்ணென்ணை மானியத்தை பெற்றுக் கொள்வதா அல்லது
அதற்கு பதிலாக மாற்று நடவடிக்கையை பயன்படுத்துவதா என்பது தொடர்பில்
தீர்மானிப்பதற்காக மீனவர் சங்கங்களை ஒன்றிணைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு
தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மீனவர் சங்கங்கள் மற்றும்
மீன்பிடி கிராமங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள வழிப்பாட்டு தலங்களின்
மதகுருமார்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதி கடற்றொழில் அமைச்சர்
சரத் குமார குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தேவையான மானியங்கள்
தொடர்பில் உரிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம்
ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி கடற்றொழில் அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மானிய கூப்பன்களை ஏனையவர்களுக்கு விற்பனை
செய்வது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதற்கு மீனவ சங்கங்களின் ஊடாக
தொடர்பிலும் ஆலோசனைகள் பெறப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் சரத் குமார
குணரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply