துபாய் : ஓமன் நாட்டில் குடிகார கணவனை குத்திக் கொன்றதால் சிறையில்
அடைக்கப்பட்ட இந்திய பெண்ணை நாடு கடத்த ஓமன் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓமன்
நாட்டில் சர் என்ற இடத்தில் இந்தியாவில் உள்ள கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர்
பள்ளி ஆசிரியையாக வேலை செய்தார். இவருக்கு வயது 40. இவருக்கு 49 வயதில்
கணவனும், 11 மற்றும் 13 வயதில் 2 குழந்தைகளும் உள்ளனர். கணவனுக்கு
குடிபழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் தகராறு
செய்துள்ளார். மேலும் குடித்து விட்டு கார் ஓட்டிய குற்றத்துக்காக
போலீசாரிடம் சிக்கி பல முறை அபராதமும் கட்டியுள்ளார்.கடந்த ஆண்டு
அக்டோபரில் வீட்டில் உள்ள அறையில் ஆசிரியையின் கணவன் மர்மமான முறையில்
இறந்து கிடந்தார்.
போலீஸ் விசாரணையில் கணவனின் குடிபோதை தகராறை பொறுக்காமல்
இந்திய பெண் கத்தியால் குத்தி கொன்றது தெரிந்தது. இதனையடுத்து அவரை சர்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது வக்கீல் கலீத் அல் நஷாஷி கூறுகையில், அவரது 2 குழந்தைகளும் தங்களது பாட்டியுடன் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது வக்கீல் கலீத் அல் நஷாஷி கூறுகையில், அவரது 2 குழந்தைகளும் தங்களது பாட்டியுடன் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் ஓமன்
அரசிடம் அவரை விடுவிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது கோரிக்கையை
பரிசீலித்த சர் நீதிமன்றம் அவரது நிலையை கருத்தில் கொண்டு சிறை தண்டனையை 6
மாதங்களாக குறைத்து உத்தரவிட்டது என்றார்.
இதனையடுத்து நேற்று அவரை
விடுவித்த சர் நீதிமன்றம் உடனடியாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த
உத்தரவிட்டுள்ளது. இதனால் ஓரிரு தினங்களில் இந்திய ஆசிரியை அங்கிருந்து
வெளியேறுவார் என அவரது வக்கீல் கலீத் அல் நஷாஷி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply