blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, April 27, 2014

பல்கலைக்கழங்களில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை

நாட்டின் அபிவிருத்திக்கு பொருந்தும் வகையில் பல்கலைக்கழகத்தில் புதிய
பாடத்திட்டத்தை  அறிமுகப்படுத்தநடவடிக்கை எடுக்க்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய புதிய பொறியியல் பாடதிட்டங்கள் பல அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சினில் ஜயந்த நவரத்ன குறிப்பிட்டார்.

புதிய பாடத்திட்டத்திற்கு உள்வாங்கப்படும் பொறியியலாளர்களுக்கான பயிற்சிகளுக்காக தொழிநுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர மேலும் பல புதிய பாடத்திட்டங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

இதற்கான நிதி ஒதுக்கீடுகள் திறைச்சேறியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►