யாழ். மாநகர சபையின் சிற்றூழியர்கள் தமக்கு நிரந்த நியமனம் வழங்கக் கோரி
இரண்டாவது நாளாக இன்றும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்.
கல்வித்
தரத்தை அடிப்படையாகக் கொண்டு நியமனங்கள் வழங்குவதற்கு யாழ். மாநகர சபை
தீர்மானித்ததை அடுத்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு
மேற்கொள்ளப்படுகின்றது.
யாழ்.
மாநகர சபையில் பணிபுரியும் சுமார் 100 தற்காலிக ஊழியர்களுக்கு, அனுபவத்தை
கருத்திற் கொண்டு நிரந்தர நியமனம் வழங்குமாறு பணிப்பகிஷ்கரிப்பில்
ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமக்கான நியமனங்களை
குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்குவதாக யாழ். மாநகர சபை முதல்வர் அளித்த
உறுதியை நிறைவேற்றவில்லை என்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள்
தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்த பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக
யாழ்ப்பாண மாநகர சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் வீதிகளிலும் அங்காங்கே
குப்பைகள் அகற்றப்படாமல் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர்
தெரிவிக்கின்றார்.
ஆயினும் இந்த விடயம் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.
No comments:
Post a Comment
Leave A Reply